Tuesday 17 February 2015

தாயான தங்க நிலாவே

நாடி நரம்பு தெரிக்க தாயாய் மாறி என்னை ஈன்றாள்...
தங்க தொட்டிலில் தாலாட்டு பாடும் நிலையில் அவள் இல்லை ...
அவள் புடவையில் தூலி கட்டி என்னை தூங்க வைத்தாள் ...
தலையனையாய் தாய் மடியினைத் எனக்கு தந்தாள்..
தட்டி தடுமாறும் தன் மகள் பொற்பாதம் புண் படுமோ என்று தன்கையால் தாங்குவாள்...
தன் தலையில் எண்ணை  இல்லாமல் போனாலும் என் மகளை எம்பி .பி .எஸ் படிக்க வைப்பேன் என்பாள்...
தடைபோட்டு நிறுத்த முடியாதது தாய் பாசம்
தளர்ந்து போனவயதிலும் தளறாதது தாய் பாசம் ஒன்றுதான்...
தாயன தங்க நிலா நீ தான்
அம்மா
தஞ்சமாய் தலைவைத்து தூங்க ஏங்கும் உன் பிள்ளை நிலா நான் தான்...

விஜி

No comments:

Post a Comment