Saturday 28 February 2015

நிழல்

நிழலில் நிஜத்தைக் கண்டேன்
நீ எதிரில் நின்ற போது எரிமலையும்
எச்சில் துப்புகிறது என்று ஏலனமாய் பேசினேன்...
என்றோ தோன்றும் பூகம்பத்தை
எதிரில் பார்த்தவனைப் போல இடிந்து போனது என் இதயம்
ஏன் என்று தெரியுமா?
இரவில் என் நிழல் என்னைப் பிரிவதைப் போல !!!
நீ என்னை விட்டுச் சென்றதால்...
இதயத்தில் இருந்து நீங்காத என் உயிராய் உன்னை ஏற்ற என் இதயத்துக்கு எதைச் சொல்லி புரியவைப்பேன்?

விஜி

நிம்மதி

நினைத்த வாழ்க்கை கிடைத்துவிட்டால் நிம்மதி பெறுமூச்சி வரும்...
நினைத்து பார்க்கத படி நீ என்னை விட்டுச் சென்றால் நிரந்தரமாகவே நின்ரே போகும் என் மூச்சி...
நிம்மதி நிறைந்த வாழ்க்கையை வாழ வழி தேடி அலைகலாய் அலைந்து கொண்டிருக்கும் என் நெஞ்சை நெருங்கி நீ வரும் நாளுக்காக நிதானமாய் நான் காத்துக் கொண்டு இருக்கிறேன்...

விஜி

Friday 27 February 2015

அவள்

சட்டென்று சாய்த்தால் மை விழியால்...
மாறிப்போனது மாந்தர் மனம்.,
மஞ்சள் பூசி மாசி மாதம் மாலை சூரியன் போல் ஒளி வீசிய பலிர் முகத்தில் வரும் வியர்வையாய் நான் மாறக்கூடாதா என்று ஏங்கவைத்தாள்...

என்னுயிர் எழுதிய இறைவனிடம் ஏட்டை பிடிங்கி இவளுக்காக ஒரு உலகத்தை உருவாக்க ஆசை கொண்டேன்...

என் வீட்டு ஜன்னல் நிலாவாக நீ நடந்தால் நீண்டு கிடப்பேன் நிலமாக, உன் நிழலாவது என் மேல் படாதா என்று ஏங்கி.!!!

விஜி

Thursday 26 February 2015

வார்த்தையும் வாழ்க்கையும்

காய்ந்த நிலத்தில் காலம் காலமாய் நான் கானல் நீர் ஊற்றிவருகிறேன் என்பதைப் போல் அல்லவா உள்ளது உன் வார்த்தை...
குறிஞ்சி நிலமாய் செழித்திருந்த என் வாழ்வை பாலை நிலமாய் மாற்றிய பாவியட நீ...
மந்தையில் செல்லும் மாடுகள் அல்ல மனிதர்கள்...
மதிக்க கற்றுக்கொள் மற்றவரின் மனதை...
மண் புழுவாய் மன்றாடினேன் மணவாழ்க்கைக்கு...
மதியற்ற நீ வீசி எறிந்தாய் என் மனதை...
மறந்து போகாது மதியற்ற உன்னோடு மனதாற உண்மையாய் இருந்த நாட்கள்...
மனித வாழ்வின் மகத்துவத்தை புரிந்து கொண்டேன் பிரிந்த பிறகு...

விஜி

காற்றில் கலையாது காதல் நினைவுகள்

காலங்கள் கடந்தாலும் கண்ணெதிரே தோன்றிய காட்சிகள் கரையாது...
கற்களில் செதிக்கி கண்ணிரால்  வரைந்த நாட்கள் அவை...
கானல் குளமாய் கண்ணில் வைத்தேன் உன் நினைவுகளை காணாமல் போகச்செய்யாதே...
கலைத்துச் செல்ல காற்றில் எழுதிய கதையல்ல அது கல்லான என் நெஞ்சில் வரைந்த ஓவியம் ...
காதலனாகவோ தோழனாகவோ  உன்னை நினைக்கவில்லை அதினும் மேல் சென்று கடவுளாக கற்பனையில் கனவுகளில் வாழ்ந்தேன்.,
அதையும் அழித்துச் செல்ல ஆசை கொண்டால் எடுத்துச் செல் என் உயிரையும் உன்னோடே...
விஜி

Tuesday 24 February 2015

மன நிலை தடுமாற்றம்

நிலை தடுமாறுகிறது என் நெஞ்சம்...
நிலைப்பட மறுக்கிறது நினைவுகள்...
நேசசிக்க நெஞ்சம் இருந்தும், நெருங்கிய சொந்தம் எனக்கில்லை என்கிறது...
அடிமையா அல்லது அனாதை யயா நான்.?
விழைந்து செய்த வேலையும் வெற்றுத்தாளாய் மாறக் காரணம் நானா.?
நிம்மதி இல்லாமல் நாள்களை கழிப்பதைவிட நின்று போகட்டும் என் மூச்சி...

விஜி

வின்மீன்கள்

வானத்து வின்மீன்கள் வலையில் விழாதா என்று எங்கினேன் ...
வரப்போவது வனதேவதை என்று தெரியாமல் போனது...
வந்தாய் என் வாச மல்லி கோடியாக...
வாரியனைக்க கைகள் துடிக்கிறது...
வந்து என்னை பின்னிக்கொல் என் வாசக் கொடியே...
நீ வராமல் போனால் நான் இராமல் போவேன் என் வானத்து நிலாவே...

விஜி..

மன அழுத்தம்

மனஅழுத்தம் மனிதனை மிருகமாக்கும்...
மண்ணையும் மறந்து தன்னையும் மறக்கும் மன நிலைக்கு கொண்டு செல்லும்...
நினைவுகள் நிலைப்பாட்டை மறக்கும்...
மனஅழுத்தம் பலரை மரண நிலைக்கும் கொண்டு செல்லும்...
மற்றவர் தன்னிலை அறிந்து செயல்பட்டால் நல்லது என்று தோன்றும்...
ஆனால் யாறும் உன்னிலை அறியார்...
விலையற்ற உன் உயிரையும் பதம் பார்க்கும் ஒரு ஆயுதம் மனஅழுத்தமே...

விஜி

Monday 23 February 2015

பின்புத்தி

தன்னிலை அறியாது பிறரின் குறையை மட்டும் பின் நின்று தேடும் பின்புத்தி மனிதர்களிடம் மட்டுமே உள்ளது...
திறமை உள்ளவன் ஒரு போதும் தற்பெறுமை சொல்தில்லை...
பிறர் தம் பெறுமையை சொல்லும் அளவிற்கு உழைப்பார்கள்...
ஒருவரை புறம் பேசுவதை விட்டு, அகத்தில் தூய உள்ளத்தோடு செயல்படு, நீ வெற்றியடைய இறைவனே உனக்கு வழிவகுப்பான்..

விஜி

Saturday 21 February 2015

நெஞ்சில் உன் நினைவுகள்

நித்திரை நான் கொண்டேன்...
உன் நினைவுகள் என்னை ஆட்கொண்டது...
உள்ளத்தில் ஊரிக்கிடக்கும் உன் ஞாபகத்தை ஒருபோதும் உலர்த்த முடியாது...
நீ உடுத்திம் நூலாடையும் எனக்கு பட்டாடையாய் பளிங்கிட்டது...
காலில் கால் கொலுசு என் கல்யாண இசைபோல் தோன்றுது...
கற்றை கூந்தலில் ஒற்றை ரோஜவும்
உலகத்து பூக்கூட்டத்தின் மணத்தை தந்தது...
நீதான் என் நித்தமும் நிறைந்து வாழும் நிறைமதி என்பதையும் நான் உணர்ந்தேன்...
நித்தில் குழிட்டு புதைத்தாலும் நெஞ்சை விட்டு அகலாது உன் நினைவுகள்...

விஜி

Wednesday 18 February 2015

ஆசையில்...

நெஞ்சில் சாய்ந்து நினைப்பதை பேச நித்தமும் ஆசை கொண்டேன்...
நெறுங்கி வரும் போதெல்லம்
நினைவுகளும் வலுப்பட்டுக் கொண்டே போகிறது...
நிஜத்தை அறிந்தும் அறியாதவனை போல நீ காட்டும் வித்தைகளை நானும் இரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்...
நீ ஒருநாள் என்னை போல் நெஞ்சத்தின் ஆசையோடு அலைந்தோடி வருவாய் அன்று என்னிலை நான் அறியேன்...
நெருப்பில் சுட்டாலும் உன் நீனைவுகள் ஒருபோதும் என்னை விட்டு பிரியாது...

விஜி

Tuesday 17 February 2015

தாயான தங்க நிலாவே

நாடி நரம்பு தெரிக்க தாயாய் மாறி என்னை ஈன்றாள்...
தங்க தொட்டிலில் தாலாட்டு பாடும் நிலையில் அவள் இல்லை ...
அவள் புடவையில் தூலி கட்டி என்னை தூங்க வைத்தாள் ...
தலையனையாய் தாய் மடியினைத் எனக்கு தந்தாள்..
தட்டி தடுமாறும் தன் மகள் பொற்பாதம் புண் படுமோ என்று தன்கையால் தாங்குவாள்...
தன் தலையில் எண்ணை  இல்லாமல் போனாலும் என் மகளை எம்பி .பி .எஸ் படிக்க வைப்பேன் என்பாள்...
தடைபோட்டு நிறுத்த முடியாதது தாய் பாசம்
தளர்ந்து போனவயதிலும் தளறாதது தாய் பாசம் ஒன்றுதான்...
தாயன தங்க நிலா நீ தான்
அம்மா
தஞ்சமாய் தலைவைத்து தூங்க ஏங்கும் உன் பிள்ளை நிலா நான் தான்...

விஜி

மலரே

பனியில் மலர்ந்த கானல் நீர்த்துளி அல்ல நீ எனக்கு....
காட்டில் மலர்ந்த காந்தல் மலர் அல்ல நீ எனக்கு...
என் நெஞ்சில் பூத்த நித்திய மலர் நீ எனக்கு....
நித்தமும் உன்னையே என் உயிர் மூச்சாக சுவாசிக்கிறேன்...
உன் வாசம் மறைந்தால்
என் சுவாசமும் மறையும்...

விஜி

மலரின் மனமே

பனியில் மலர்ந்த கானல் நீர்த்துளி அல்ல நீ எனக்கு...
காட்டில் மலர்ந்த காந்தல் மலர் அல்ல நீ எனக்கு...
என் நெஞ்சில் பூத்த நித்திய மலர் நீ எனக்கு...
நித்தமும் உன்னையே என் உயிர் மூச்சாக சுவாசிக்கிறேன்...
உன் வாசம் மறைந்தால்
என் சுவாசமும் மறையும்...

விஜி

Friday 13 February 2015

கல்வி

கருத்துக்கள் காகிதத்தில் மட்டும் இருந்தால் என்ன பலன் ?
கருத்து அறிந்த மனிதர்களாக வாழ்வதே மிகச் சிறந்தது...
கல்வி காகிதத்தில் உள்ளதை நமக்கு கற்பிக்கும் ...
அதை நாம் தான் பொருளறிந்து வாழ்கையிலும் பயன்படுத்த வேண்டும்...

விஜி

Thursday 12 February 2015

தேவதையே

வானத்தில் விண்மீன் வா என்று அழைப்பதைப் போல உன் வாயின் வார்த்தைக்காக வானம் பார்த்த பூமியாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ....
வா என் தேவதையே வாழ்க்கையை வாந்து காட்ட வழிதேடுவோம்
இருவரும் சேர்ந்து ...
தனிமையில் வாட என் வாழ்க்கையும் வயதும் மறுக்கிறது...

விஜி

Friday 6 February 2015

காதல்

காதல் கண்ணில் கண்டேன்...
கனிவை கண்ணில் கண்டேன் ...
கரிசனம் கண்ணில் கண்டேன்...
கருவிழியில் என்னைக் கண்டேன்...
கண்டதெல்லாம் கனவாய் போகாமல்...
காட்சிப்படுத்த உன் கரம் பற்றுவேன்...
விஜி

Thursday 5 February 2015

தலைகனம் விடு

திறமை தாண்டி
தலைவன் போல்
தலைகனம் கொண்டவர்கள்
தலைகீழ் நின்றாலும்
தலைவனாகிவிட முடியாது
தலைவிதி அவனை
தலைகீழே தல்லி
தலை நிமிரவிடாமல் செய்துவிடும்
தலைகனம் விடுத்து தன்னை நம்பினோர்க்கு தங்களால் இயன்றதை செய்வோம்...

விஜி