Friday 12 June 2015

தலைவன்

தலைவன் தன்முன் தலைவி தன்தால் படிந்தால், தங்கம் காலில் படக்கூடாது என்று எட்டிப்பித்த ஏன் தோல்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தது, தித்திக்கும் தேன் வார்த்தைகளை திகட்டாமல் செவி மடுத்தேன், தெளிந்த நீரோடையின் தீன்டா தங்க மீனாய் தேடி எடுத்தாய் என் நெஞ்சை, நீ நான் என்றள்ள என்னவளே இனி நாம் நமது என்று மட்டுமே இந்த உலகம் மாறும் என்றுணர்த்தினான் என் தலைவன்., என்றென்னை சேருவாய் ஏங்கித்தவிக்கிறது என்னிதையம் என்னுயிரே என்னை சேர இன்னும் எத்தனை காலம் நான் காத்திருக்கவேண்டும்.???

விஜி

Wednesday 10 June 2015

வண்ணமய வாழ்வு

வண்ணத்துப் பூச்சியாய் வாழ்வில் வலம் வந்தேன்., எண்ணத்தில் எனக்கென்று எதுவும் நான் என்னியதுமில்லை, எலிமையாய் எனக்காக எல்லாம் என்று என்னுல் மனக்கோட்டை மலர்ந்தது., மலரின் வாசமாய் என் சுவாசமும் மாறிப்போனது., மண்ணுல் மறைந்தாலும் மாறாதது நம் பந்தம் நான் இனி என்றுமே உன் சொந்தம்

விஜி

வாழ்க்கையில் வண்ணம்

வரைந்த வாழ்க்கையில் வண்ணத்தை கூட்டி எண்ணத்தை என்னுல் ஏற்றி என்றும் அழியாத அழகிய ஓவியமாய் வரைய ஆசை கொண்டேன்., வாழ்க்கையில் வலிகளை தாங்க வருங்காலாம் எனக்கு முதலில் வழி விடுக்கிறது., வண்ணம் தீட்ட உனக்கு வழியில்லை முதலில் தடித்த இதையத்தை தேற்று என்றது., வார்த்தை வற்றி போகாமல் வாலிமையடையச் செய்வேன் வால்முனையான என் பேனாவின் மை வற்றும் வரையில்...

விஜி