Friday, 12 June 2015

தலைவன்

தலைவன் தன்முன் தலைவி தன்தால் படிந்தால், தங்கம் காலில் படக்கூடாது என்று எட்டிப்பித்த ஏன் தோல்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தது, தித்திக்கும் தேன் வார்த்தைகளை திகட்டாமல் செவி மடுத்தேன், தெளிந்த நீரோடையின் தீன்டா தங்க மீனாய் தேடி எடுத்தாய் என் நெஞ்சை, நீ நான் என்றள்ள என்னவளே இனி நாம் நமது என்று மட்டுமே இந்த உலகம் மாறும் என்றுணர்த்தினான் என் தலைவன்., என்றென்னை சேருவாய் ஏங்கித்தவிக்கிறது என்னிதையம் என்னுயிரே என்னை சேர இன்னும் எத்தனை காலம் நான் காத்திருக்கவேண்டும்.???

விஜி

Wednesday, 10 June 2015

வண்ணமய வாழ்வு

வண்ணத்துப் பூச்சியாய் வாழ்வில் வலம் வந்தேன்., எண்ணத்தில் எனக்கென்று எதுவும் நான் என்னியதுமில்லை, எலிமையாய் எனக்காக எல்லாம் என்று என்னுல் மனக்கோட்டை மலர்ந்தது., மலரின் வாசமாய் என் சுவாசமும் மாறிப்போனது., மண்ணுல் மறைந்தாலும் மாறாதது நம் பந்தம் நான் இனி என்றுமே உன் சொந்தம்

விஜி

வாழ்க்கையில் வண்ணம்

வரைந்த வாழ்க்கையில் வண்ணத்தை கூட்டி எண்ணத்தை என்னுல் ஏற்றி என்றும் அழியாத அழகிய ஓவியமாய் வரைய ஆசை கொண்டேன்., வாழ்க்கையில் வலிகளை தாங்க வருங்காலாம் எனக்கு முதலில் வழி விடுக்கிறது., வண்ணம் தீட்ட உனக்கு வழியில்லை முதலில் தடித்த இதையத்தை தேற்று என்றது., வார்த்தை வற்றி போகாமல் வாலிமையடையச் செய்வேன் வால்முனையான என் பேனாவின் மை வற்றும் வரையில்...

விஜி

Sunday, 31 May 2015

இதயம்

அன்பின் அணிவகுப்பு.,
ஆசையின் ஓசை,
இசையில் இன்பம்., இவைகளை
ஈர்த்த இந்த இதையத்தின் இனிமையை என்னவென்று நான் சொல்வேன்.,
உயிர் உள்ளவரை உனக்காய் நான் மட்டும் என்றல்லாமல் நமக்காய் நாம் வாழ்வோம்.,
ஊரரிய உனைச்சேரும் நாளை
உளமேல்லாம் உற்று நோக்குகிறது.,
என் நெஞ்சை நீ அறிந்து என்னுல் வந்து சேரும் நேரத்தை எதிர்பார்த்து ஏங்குகிறேன் இந்த இதையம்.,
ஏற்றுக்கொள் என்னிதயத்தை ஏழ் ஐந்து ஜென்மங்கள் எடுத்தாலும் எம்முயிர் உனதாகட்டும்.,

விஜி

Wednesday, 20 May 2015

மணிவேர்

கலைந்த மேகமாய் மறைந்துப் போகாமல் மண்ணின் மணிவேறாய் என்னுல் புதைந்திடு மழையும் வெய்யிலும் மனமுவந்து மருக்காமல் உஉனக்காய் ஏற்கிறேன்...  மலரின் வாசமாய் மனதில் உன்னை நேசிக்க மனம் நித்தமும் நினைத்தேங்குகிறது...
மனமே என்னை மறுத்துவிட்டு போகாதே நீ மறுத்தால் நான் மறுத்து மட்டுமே போவேன் மறு ஜென்மத்தில் மண்ணில் மனிதமாய் பிறவாமல் போக வரம் வேண்டுவேன் அந்த தேவனிடம்... மனதோடு வந்து சேர்ந்து மழைப்பால் என் மனதை குளித்திடு...

விஜி

Friday, 8 May 2015

அழகு

ஆழகாய் பிறப்பது ஆனவமாய் வாழ அல்ல...
அழகின் ஆழம் அன்பில் மட்டுமே வெளிப்படுத்த இயலும்...
உலகில் உல்ல எல்லா உயிர்களுமே உண்மையில் அகஅழகை கொண்டுள்ளது...
அன்பின் வெளிபாடு அகத்தில் இருந்து அழகாய் வந்தால் போதும் அது எப்பொழுதுமே அழியாமல் வாழும்...
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் உன்னத அழகை தனக்கே உரிதாக்கி உருவாக்கப்பட்டுள்ளது, அன்பின் வெளிபாடும் அதனையே அடிப்படையாகக் கொண்டுள்ளது...

விஜி

Thursday, 7 May 2015

வாழ்க்கை

அழகின் ஆழத்தை அங்கத்தில் காணாமல் , அகத்தில் காணும் ஆண்களுக்கு அழகான வாழ்வு அவருக்காக என்றுமே காத்திருக்கும்...

விஜி