Tuesday, 31 March 2015

நினைவுகள்!?

நித்திரை கொடுக்க நினைவுகள் தடுக்க...
நிறைமதியும் குறை மதியாய் கூரும் கண்களுக்கு...
கனவெது நினைவெது என்று என்னிப்பார்க்காத அளவு என் நெஞ்சம் நித்தமும் உன்னை நினைக்கிறது...
நினைவுகளோடு வாழாமல் கனவுகளோடு படும் தவிப்பை கான முடியாமல் கலங்கும் கண்ணிற்கு கைதரும் உன்னை எங்கு காண்பேன்...?

விஜி

Monday, 30 March 2015

தூது

அறியாத ஆசைகள் தெரியாமல் போகாது...
தூது சென்றது என் இதையம் அல்லவா...
தெளிவாய் பேசி தென்ரலாய் வருடி மட்டும் வரவில்லை உன் இதயத்தை திருடியும் வந்தது...
வாழ்வின் வழி வெள்ளி என்று வந்த வாஞ்சைத் தலைவன் நீ தானோ.,!

விஜி

Thursday, 26 March 2015

அன்பு

ஆணுக்கு அழத்தெரியுமோ இல்லையோ...
ஒரு பெண்ணின் ஆசையினை அறியத்தெரியும்...
இது மட்டும் போதுமே ஆழிப் பேரலையாய் அலையும் ஆசைகளுக்கு ஆறுதல் ஒரு (ஆண்)துணை...
அதை அறிந்தவனுக்கு ஆயுல் முழுக்க அன்பை மட்டுமே பொழியும் ஓர் அர்ப்புத உயிர் "பெண்" ...

விஜி

Sunday, 8 March 2015

பெண்

பெண் என்பது மென்- மையின் பெயராகும்
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் பெண் இல்லாமல் இல்லை..
இந்த பூ உலகில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் பிறவியை தரும் ஒரு உத்தம உயிர் பெண்..
உன்னிலும் என்னிலும் உயிர் மூச்சாய் வாழும் ஓர் அழகோவியம் பெண்..
பெண்மையின் அழகும் மன ஆழமும் யாராலும் அளந்து அரிய முடியாது...
ஆழ்கடலாய் நம்முல் வாழும் அழகோவியங்களை வாழ்த்தமல் வணங்கி பெண்கள் தின வாழ்த்துக்களை அவர்களின் பாதங்களில் வைக்கிறேன்..


விஜி

Friday, 6 March 2015

சூடு

கண்ணில் கண்ணீர் தந்தாய்..
 கதரி உன்னிடம் நான் கென்சவும் இல்லை..
 உன் காலிலும் நான்வும் விழுந்து கதரவும் இல்லை...
ஆனால் என் கண்ணீருக்கு நீயும் ஓரு காரணம்...
காலில் போடும் செறுப்பிற்கும் உயிர் உண்டு அது இறந்தால் உன் கால்களில்
கண்டது படும்...
அதே போல் வழ்வில் சிரிதேனும் சுரனையோடு வாழ கற்றுக் கொள்..
மனிதன் என்பதை மறந்து மண்ணாக வாழாதே....
மதியற்றவன் என்று உனக்கு பெயர் சூட்டி தெருவில் கூட நடக்க விடாமல் செய்து விடுவார்கள்...

Thursday, 5 March 2015

அப்பா

தாயான தலைமகன் தந்தையைப் போல ஒரு தெய்வமுண்டோ.???
தன்னிகர் இல்லா தாய்மை உணர்வை தருபவர் தந்தை...
தன் பிள்ளையின் பெருமூச்சில் உள்ள காரணத்தையும் தான் முன்னமே அறிந்து தீர்ப்பவர்...
வாழ்வில் ஒரு ஆட்சியாளனாய் முதல் உதாரணம் தந்தை...
தான் தலை தழைக்க தரை தொட்டு வானம் வரை வளர போறடும் ஒரு உன்னத உயிர் தந்தை...
அப்பா.!!! ஆருதல் பல இருந்தாலும் அப்பாவின் பாசப்பிடியில் பலிர் என்று புண்ணகை அணிய வைக்கும் ஒரு அற்புத வரம் தந்தை...

விஜி

Tuesday, 3 March 2015

அம்மா

பெண்!!! பெயரால் தோற்றத்தால் நான் பெண்ணானேன்...
பிறந்த நாள் முதல் இப்பிறவி முடியும் வரை நான் கொண்ட கடமைகுக்காக காலங்களை கழித்தேன்...
நான் என்று வாழாமல் தாம் என்று வாழும் ஒரு உன்னத உயிர் பெண்...
பிறக்கும் எல்லா உயிர்க்கும் பிறவி தரும் தவம் செய்யாம கிடைக்கும் வரம் அம்மா...
அ என்பது ஆதியும் அந்தமும் அடங்கும் அதன் அர்த்தமே அம்மா...
அகில உலகை காக்கும் ஒரு உயிர் உள்ளது உண்மையானல் அதன் உண்மை உருவம் அம்மா...
பிறவி கொடுத்த பேறுயிர் உனக்கு...எத்தனை பிறவி எடுத்தும் கடனாலி நான் உனக்கு அம்மா....

Monday, 2 March 2015

காலம்

பின் நடக்கப் போவதை எண்ணி பின் நோக்கி வாழ்வதை விட இன்று என் கையில் என்று எதிர் பார்க்காமல் வாழ்ந்து பார்...!!
உலகம் உன்னுடையதாகும்...
ஒவ்வொரு நிமிடமும் காற்றில் எழுதப்படவில்லை கலைந்து செல்ல...!!!
கற்கலில் செதுக்கியதற்கு ஈடாகும் காலம் கடந்தாலும் நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்க்க இருக்கும்...
இறைவன் கொடுத்த வாழ்க்கையை ஏலனமாய் எண்ணாமல் இன்று உன்னால் முடிந்ததை செய் இயல்பாகவே உனக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்...
இனி இறந்த காலத்தை எடுத்துப் போட்டுவிட்டு....
இருக்கும் காலங்கலை இனிதாய் வாழ்வோம்...

விஜி

Sunday, 1 March 2015

நினைவுகள்

நேற்றைய நினைவுகள் நாளைய நிஜங்களாய் மாறலாம்...!?
ஆனால் நீ இல்லாத நாளை நினைத்துப் பார்க்கவும் இயலாது...
நீ தந்த நினைவுகளை நீட்டிப் படிக்க நிச்சையம் நூறு ஜென்மங்கள் எடுக்க வேண்டும்...
எதைநான் பிடித்து வந்தேன் என்றறிவேயேன்..?
பின் நோக்கிச் சென்றாலும் பிழையும் ஆகாது பிரிக்கவும் முடியாது உன் நினைவுகளை...
உன் உயிர் உள்ளவரை உன் உள் உணர்வாய் நான் உயிரோடே தான் இருப்பேன்...

விஜி