இரவுகள் இல்லாமல் இனிமை இல்லை...
இனி நீ இல்லாமல் நான் இல்லை...
நீண்ட நாள் தொடரும்
தொடுவானம் நீயானலும்
உன்னை துரத்தும் ...
வெண் மேகம்
நானாவேன்...
விஜி
Thursday, 29 January 2015
இரவுகள்
Wednesday, 28 January 2015
இயற்கை அன்னை
Monday, 26 January 2015
எல்லை காக்கும் எம்முயிர் தோழர்களுக்கு
நாட்டின் எல்லையில் நின்று
வீடற்று வெகுதூரமாய் இருந்தும்
விண் மீன்களின் வெளிச்சத்தை வெண் மனதோடு ஏற்று
வெகு தூரத்தில் உள்ள தன் உறவுகளை
வெண் நிலாவில் தடம் பதிப்பதை போல் பார்த்துச் செல்லும்
என் நாட்டின் வீரமிக்க மன்னர்களை வாழ்த்த வயதில்லாமல்...
வணங்குகிறேன்...
குடியரசு தின வாழ்த்துகள் தோழர்களே...
விஜி
குடியரசு தினம்
கூட்டு குடும்பமாய் வாழும்
எம் நாட்டின் தோழமை நண்பர்களுக்கு 66 ஆம் ஆண்டு குடியரசு தின வாழ்த்துக்கள்...
விஜி
Saturday, 24 January 2015
வளர்ந்து வரும் பெண் சமுதாயம்
யாரடிமை இந்த நாட்டில்….,
விலங்கிட்டு, வேலியிட்டு,
பூட்டி வைத்த பூட்டை உடைத்தெறிந்து,
தடைகள் அனைத்தும் தகர்த்தெறிந்து,
உறுதியோடு தலைநிமிர்ந்து,
தாயகம் காக்க தழைத்தெழுந்த,
தங்கத்தாரகைகள், எம்நாட்டின் பெண்கள்.
அடிமைத்தனம் அழித்து ஆளவந்த பூமியில், ஆண்களுக்கு நிகர் நாங்களும் உள்ளோம் என உரக்கச் சொன்னவர்கள், எம் முன்னோர்கள்.
பாரதி கண்ட புதுமைப் பெண்களாய், எம் நாட்டில் விழித்தெழுந்தது 1956க்குப் பின்பு,
நாட்டில் எந்தத் துறையில் இல்லை எம் பெண்கள்.
காலம் கடந்து, கண்ணீர் துடைத்து, கலங்கரை விளக்காய் நம் வாழ்வின் உதாரணமாய் நின்றவர்கள் பலர்.
முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு, வீரமங்கை வேலு நாச்சியார் இன்னும், இன்னும் பலர் உள்ளனர்.
அன்று முதல் இன்று வரை அன்பிற்கு இலக்கணமான அம்மா என்று மட்டும் இல்லாமல், அனைத்து துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர்கள் பெண்கள்.
அரசியலா, அறிவியலா, ஆராய்ச்சியா அனைத்து துறைகளிலும் தடம் பதித்து, தங்களது தனித்துவத்தால், சரித்திரத்தில் இடம் பிடித்தவர்கள் எம் சாதனைப் பெண்கள்.
இப்பெண்கள் கூட்டம் ஒன்றாய் திரண்டு, அகில உலகையும் அன்பு மயமாக மாற்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
விஜி
மதி முகமே
முழு மதியை கார் மேகம் மறைப்பதைப்
போல...
உன் முழு முகத்தை
உன் கார் கூந்தல் மறைத்தது
மறைத்தது உன் முகத்தை மட்டும் அல்ல...
என் காதலையும் தான்...
விஜி
அம்மா
பெற்றெடுத்து பிறவி கொடுத்து பிறை நிலா காட்டி பால் சோறு உட்டுவாள்...
உன் சிரிப்பில் சிறிதேனும் சலனம் இருந்தாலும் ...
சட்டென்று அறியும் ஆராய்ச்சியாளர் ஆகிறாள்..
அவளைவிட பெரிய தெய்வம் வேறுண்டோ???
அம்மா ...
விஜி