Wednesday, 29 August 2018

பெண்பிள்ளை பெற்றதில் பெருமிதம்

அழகாய் அவள் ஆழப்பதிய உதிர்த்த முதல் வார்த்தை *அம்மா* .....
மழலை மொழி கொண்டு மனதை மயக்கும் மர்மம் கற்றவள் அவள்...
மண்ணில் பிறந்த நான் மாலாத இன்பத்தை மனதார அனுபவிக்க வரம் தந்த தேவதை .....
*பெண்பிள்ளை பெற்றதில் பெருமிதம் கொல்வோம்* .....

(விஜி)
பொதுவாக பெண்பிள்ளை பெற்றவர்கள் அவர்கள் ஆடை, ஆபரணங்களை அணிந்து கொண்டால் அதை அவர்களுடைய பெற்றோர் இரசிப்பதுண்டு.,
ஆனால் அன்னேரம் நமக்கு குச்சமும் வந்து ஏன் என்னை இப்படி பாக்குரீங்க இதுக்கு முன்னாடி இந்த முகத்த பார்த்ததே இல்லையானு கண்டபடி வசை பாடினதுண்டு, ஆனால் அதன் அர்த்தம் , நான் ஒரு பெண்பிள்ளையை பெற்று அவளை அலங்கரித்து பார்க்கும் போது என்னையும் அறியாமல் அவளை பார்த்தபடியே நிர்க்கும் போதுதான் புரிகின்றது.....

தாய்மையும்( பெண்ணையும் ) பெற்றவர்க்கே கிடைக்கும் பேரானந்தம் .....

(விஜி)

Thursday, 30 July 2015

காலத்தின் நாயகன் கலாம்

தமிழனை தலைநிமிரச் செய்த தன்னலம் அற்ற தாரகத்தளைவன்...
தனி ஒரு மனிதனாய் தமிழை தலை நிமிற உலக நாட்டின் பேச்சுறையின் போழுதும் தமிழை தாரக மந்திரமாய் தந்தார்.,
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தையை தமிழ் இளைய சமுதாயத்திற்காக வாழ்ந்து காட்டிய தமிழன்.,
கலாம் ஐய்யா கண்டுபிடித்தது வெறும் ராக்கட்டையும் ஏவுகணையும் மட்டும் அல்ல எம்மண்ணின் இளைய சமுதாயத்தின் எழுச்சியையும் வளர்ச்சியையும் எழுப்பிவிட்டவர்.,
எங்கள் எழுச்சி நாயகன் மண்ணுல் புதைக்கப்பபடவில்லை எங்களுள் விதைக்கப்பட்டுள்ளார் அது இனி விரிட்சமாய் வளரும்...

தமிழன் என்பதில் பெருமிதம் கொல்வோம்...

எம் தமிழ் தாயின் மகன் இந்த வையகம் வாழும் வரை வாழ்வார்...

வாழ்க கலாம் ஐய்யாவின் புகழ்.,
அவர்கனவை நனவாக்க வாழ்ந்திடுங்கள்...

Friday, 12 June 2015

தலைவன்

தலைவன் தன்முன் தலைவி தன்தால் படிந்தால், தங்கம் காலில் படக்கூடாது என்று எட்டிப்பித்த ஏன் தோல்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தது, தித்திக்கும் தேன் வார்த்தைகளை திகட்டாமல் செவி மடுத்தேன், தெளிந்த நீரோடையின் தீன்டா தங்க மீனாய் தேடி எடுத்தாய் என் நெஞ்சை, நீ நான் என்றள்ள என்னவளே இனி நாம் நமது என்று மட்டுமே இந்த உலகம் மாறும் என்றுணர்த்தினான் என் தலைவன்., என்றென்னை சேருவாய் ஏங்கித்தவிக்கிறது என்னிதையம் என்னுயிரே என்னை சேர இன்னும் எத்தனை காலம் நான் காத்திருக்கவேண்டும்.???

விஜி

Wednesday, 10 June 2015

வண்ணமய வாழ்வு

வண்ணத்துப் பூச்சியாய் வாழ்வில் வலம் வந்தேன்., எண்ணத்தில் எனக்கென்று எதுவும் நான் என்னியதுமில்லை, எலிமையாய் எனக்காக எல்லாம் என்று என்னுல் மனக்கோட்டை மலர்ந்தது., மலரின் வாசமாய் என் சுவாசமும் மாறிப்போனது., மண்ணுல் மறைந்தாலும் மாறாதது நம் பந்தம் நான் இனி என்றுமே உன் சொந்தம்

விஜி

வாழ்க்கையில் வண்ணம்

வரைந்த வாழ்க்கையில் வண்ணத்தை கூட்டி எண்ணத்தை என்னுல் ஏற்றி என்றும் அழியாத அழகிய ஓவியமாய் வரைய ஆசை கொண்டேன்., வாழ்க்கையில் வலிகளை தாங்க வருங்காலாம் எனக்கு முதலில் வழி விடுக்கிறது., வண்ணம் தீட்ட உனக்கு வழியில்லை முதலில் தடித்த இதையத்தை தேற்று என்றது., வார்த்தை வற்றி போகாமல் வாலிமையடையச் செய்வேன் வால்முனையான என் பேனாவின் மை வற்றும் வரையில்...

விஜி

Sunday, 31 May 2015

இதயம்

அன்பின் அணிவகுப்பு.,
ஆசையின் ஓசை,
இசையில் இன்பம்., இவைகளை
ஈர்த்த இந்த இதையத்தின் இனிமையை என்னவென்று நான் சொல்வேன்.,
உயிர் உள்ளவரை உனக்காய் நான் மட்டும் என்றல்லாமல் நமக்காய் நாம் வாழ்வோம்.,
ஊரரிய உனைச்சேரும் நாளை
உளமேல்லாம் உற்று நோக்குகிறது.,
என் நெஞ்சை நீ அறிந்து என்னுல் வந்து சேரும் நேரத்தை எதிர்பார்த்து ஏங்குகிறேன் இந்த இதையம்.,
ஏற்றுக்கொள் என்னிதயத்தை ஏழ் ஐந்து ஜென்மங்கள் எடுத்தாலும் எம்முயிர் உனதாகட்டும்.,

விஜி