Wednesday, 10 June 2015

வாழ்க்கையில் வண்ணம்

வரைந்த வாழ்க்கையில் வண்ணத்தை கூட்டி எண்ணத்தை என்னுல் ஏற்றி என்றும் அழியாத அழகிய ஓவியமாய் வரைய ஆசை கொண்டேன்., வாழ்க்கையில் வலிகளை தாங்க வருங்காலாம் எனக்கு முதலில் வழி விடுக்கிறது., வண்ணம் தீட்ட உனக்கு வழியில்லை முதலில் தடித்த இதையத்தை தேற்று என்றது., வார்த்தை வற்றி போகாமல் வாலிமையடையச் செய்வேன் வால்முனையான என் பேனாவின் மை வற்றும் வரையில்...

விஜி

Sunday, 31 May 2015

இதயம்

அன்பின் அணிவகுப்பு.,
ஆசையின் ஓசை,
இசையில் இன்பம்., இவைகளை
ஈர்த்த இந்த இதையத்தின் இனிமையை என்னவென்று நான் சொல்வேன்.,
உயிர் உள்ளவரை உனக்காய் நான் மட்டும் என்றல்லாமல் நமக்காய் நாம் வாழ்வோம்.,
ஊரரிய உனைச்சேரும் நாளை
உளமேல்லாம் உற்று நோக்குகிறது.,
என் நெஞ்சை நீ அறிந்து என்னுல் வந்து சேரும் நேரத்தை எதிர்பார்த்து ஏங்குகிறேன் இந்த இதையம்.,
ஏற்றுக்கொள் என்னிதயத்தை ஏழ் ஐந்து ஜென்மங்கள் எடுத்தாலும் எம்முயிர் உனதாகட்டும்.,

விஜி

Wednesday, 20 May 2015

மணிவேர்

கலைந்த மேகமாய் மறைந்துப் போகாமல் மண்ணின் மணிவேறாய் என்னுல் புதைந்திடு மழையும் வெய்யிலும் மனமுவந்து மருக்காமல் உஉனக்காய் ஏற்கிறேன்...  மலரின் வாசமாய் மனதில் உன்னை நேசிக்க மனம் நித்தமும் நினைத்தேங்குகிறது...
மனமே என்னை மறுத்துவிட்டு போகாதே நீ மறுத்தால் நான் மறுத்து மட்டுமே போவேன் மறு ஜென்மத்தில் மண்ணில் மனிதமாய் பிறவாமல் போக வரம் வேண்டுவேன் அந்த தேவனிடம்... மனதோடு வந்து சேர்ந்து மழைப்பால் என் மனதை குளித்திடு...

விஜி

Friday, 8 May 2015

அழகு

ஆழகாய் பிறப்பது ஆனவமாய் வாழ அல்ல...
அழகின் ஆழம் அன்பில் மட்டுமே வெளிப்படுத்த இயலும்...
உலகில் உல்ல எல்லா உயிர்களுமே உண்மையில் அகஅழகை கொண்டுள்ளது...
அன்பின் வெளிபாடு அகத்தில் இருந்து அழகாய் வந்தால் போதும் அது எப்பொழுதுமே அழியாமல் வாழும்...
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் உன்னத அழகை தனக்கே உரிதாக்கி உருவாக்கப்பட்டுள்ளது, அன்பின் வெளிபாடும் அதனையே அடிப்படையாகக் கொண்டுள்ளது...

விஜி

Thursday, 7 May 2015

வாழ்க்கை

அழகின் ஆழத்தை அங்கத்தில் காணாமல் , அகத்தில் காணும் ஆண்களுக்கு அழகான வாழ்வு அவருக்காக என்றுமே காத்திருக்கும்...

விஜி

Saturday, 2 May 2015

உன் வருகையை எதிர்பார்த்து

உரங்காமல் உண்ணாமல் உன் நினைவால் நான் வாடும் வாட்டத்தைக்கண்டு எங்காத உன் மனதை எப்படி நான் மாற்றுவேன்.???
எவ்வாறு எவரோடு என் வாழ்க்கை பாதை உருவாகிறதோ என்று எண்ணி என் நாட்கள் பல உருண்டோடியது...
உள்ளத்தின் கல்வனை ஒரு போதும் நான் பிரிய மாட்டேன் என்று என் மனம் சொல்ல, தினமும் உன் முகம் தேடினேன்...
தேடலல் தளைவனைக் கண்டேன் தளர்ந்த என் நெஞ்சத்தை தாங்கிப் பிடித்த கரத்தை ககைப்பற்றும் நாளுக்காக நித்தமும் நான் ஏங்குகிறேன்...
அறிந்தும் அறியாத கல்வனாய் நீ காட்டும் நாடகத்தை கண்ணால் கண்டு கரைந்து கொண்டே போகிறது கருவிழிகளும்...
கனவு காதலன் கரை தொட்டு கண்முன் வந்தும் கரைந்து கொண்டிருக்கும் என் கண்ணீரை துடைக்க கரைப்புரன்டோடும் காற்றாறு வெள்ளமாய் வா என் காதல் கணவா...

விஜி

Wednesday, 1 April 2015

வாழ்க்கைக்கு முக்கியம் வண்ணமா அல்லது நல்ல எண்ணமா?

கனவுகளுக்கு வண்ணம் இல்லை...
நினைவுகளுக்கு வண்ணம் கொடுக்க நீ இல்லை...
நிலைத்து நின்று நினைவுகளை நிஜப்பாடுத்த நினைத்தே நாட்கள் கழிகின்றன...
நீ வந்த இடமே நீ வளர்ந்த இடமோ நான் அறியேன்...
நீ எங்குள்ளாய் என்பதையும் நான் அறியேன்...
ஏங்கும் என் இதையத்திற்கு வண்ணம் ஒரு குறையானால் பிறவியின் பிழையை யாரால் இப்பொழுது மாற்ற முடியும்...
நிறத்தை உன் உடலில் நான் எதிப்பார்க்கவில்லை மனத்தில் மட்டுமே பார்க்க ஏங்குகிறேன்...
எண்ணங்கள் நம்மை வாழ்விக்கும் வண்ணங்கள் நம்மை தாழ்விக்கும்...

விஜி